ரோஹித் சர்மா படம் | AP
கிரிக்கெட்

ரோஹித் சர்மா ஓய்வு பெற்றாலும் ஆச்சரியமில்லை: முன்னாள் தலைமைப் பயிற்சியாளர்

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

DIN

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை (ஜனவரி 3) தொடங்கவுள்ளது.

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீதான விமர்சனங்களும், கேப்டன் ரோஹித் சர்மா மீதான விமர்சனங்களும் அதிகரித்துள்ளன. ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டும் எனவும் அல்லது அவர் ஓய்வு பெற்று விடலாம் எனவும் ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்களும் நினைக்கும் வகையிலான சூழல் உருவாகியுள்ளது.

ஓய்வு பெற்றாலும் ஆச்சரியமில்லை

கேப்டன் ரோஹித் சர்மா மீதான விமர்சனங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், இன்னும் சில மாதங்களில் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா அவருடைய முடிவை விரைவில் எடுப்பார். ஆனால், அவர் ஓய்வு முடிவை அறிவித்தாலும், நான் ஆச்சரியமடைய மாட்டேன். ஏனெனில், அவர் இளம் வீரராக மாற முடியாது. அணியில் இளம் வீரர்கள் பலரும் உள்ளனர். கடந்த ஆண்டில் 40-க்கும் அதிகமாக சராசரியை வைத்துள்ள ஷுப்மன் கில் அணியில் விளையாடாமல் இருக்கிறார். அதனால், ரோஹித் சர்மா ஓய்வு பெற்றால் ஆச்சரியப்பட மாட்டேன். ஆனால், முடிவு அவருடையதாக இருக்கும் என்றார்.

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா விளையாடிய ஐந்து இன்னிங்ஸ்களில், அவரது அதிகபட்ச ஸ்கோர் 10 ரன்கள் மட்டுமே. இந்திய அணி நாளை சிட்னியில் நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.

சிட்னி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கடைசி போட்டிக்கான பிளேயிங் லெவனில் கேப்டன் ரோஹித் சர்மா இடம் குறித்து எதுவும் தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT