படம் | AP
கிரிக்கெட்

இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் நிதானம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின்போது, பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் குவித்துள்ளது.

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின்போது, பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் குவித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 615 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் அணி 194 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆனது.

போட்டியின் நான்காம் நாளான இன்று (ஜனவரி 6) பாகிஸ்தான் அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. உணவு இடைவேளையின்போது, பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஷான் மசூத் 137 ரன்களுடனும், சௌத் ஷகீல் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவைக் காட்டிலும் 109 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4வது நாளாகக் குறைந்த தங்கம் விலை!

டிரம்ப் வரி! இனியும் மௌனமா? இந்தியாவின் பக்கம் நிற்பதாக சீனா அறிவிப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம் 120 அடியாக நீடிப்பு

நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு!

பள்ளித் தாளாளா் வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளையடித்த சம்பவம்: 9 போ் கைது

SCROLL FOR NEXT