முகப்பு
கிரிக்கெட்

மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 11) அறிவித்துள்ளது.

Updated On : 11 ஜனவரி, 2025 at 12:46 PM
பாகிஸ்தான் அணி வீரர்கள்
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 11) அறிவித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 17 ஆம் தேதி முல்தானில் தொடங்குகிறது.

இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 11) அறிவித்துள்ளது.

காயம் காரணமாக பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர் சைம் ஆயூப் அணியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக இமாம் உல் ஹக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் காசிஃப் அலி அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம்

ஷான் மசூத் (கேப்டன்), சௌத் ஷகீல் (துணைக் கேப்டன்), பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இமாம் உல் ஹக், கம்ரான் குலாம், முகமது ஹுரைரா, ரோஹாலி நசீர், நோமன் அலி, சாஜித் கான், அப்ரார் அகமது, சல்மான் அஹா அலி, முகமது அலி, குர்ரம் ஷாஷத் மற்றும் காசிஃப் அலி.

முழு கட்டுரையைப் படிக்க →