குல்தீப் யாதவ் படம் | பிசிசிஐ
கிரிக்கெட்

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க குல்தீப் யாதவ் தீவிர பயிற்சி!

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதற்காக சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

DIN

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதற்காக சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவுக்கு, கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது காயம் ஏற்பட்டது. அதன் பின், அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறவுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் குல்தீப் யாதவ் இடம்பெறவில்லை.

மீண்டும் இடம்பிடிக்க ஆர்வம்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் நிறைவடைந்த பிறகு, அந்த அணியுடன் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவதற்காக குல்தீப் யாதவ் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

குல்தீப் யாதவின் உடல்தகுதி பரிசோதிக்கப்பட்டு, அவர் முழு உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியிலும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும் நிலையில், இந்திய அணி பிப்ரவரி 20 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் விளையாடுகிறது.

குல்தீப் யாதவ் முழு உடல்தகுதியை நிரூபிக்க தவறும் பட்சத்தில், அணியில் ரவி பிஷ்னோய் அல்லது வருண் சக்கரவர்த்தி இவர்கள் இருவரில் ஒருவர் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT