ஜோஸ் பட்லர் (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராவதை டி20 தொடர் பாதிக்காது: ஜோஸ் பட்லர்

டி20 போட்டிகளில் விளையாடுவது இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராவதைப் பாதிக்காது என அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

DIN

டி20 போட்டிகளில் விளையாடுவது இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராவதைப் பாதிக்காது என அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 நாளை கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான பயிற்சியில் இரண்டு அணிகளின் வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாதிக்காது

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், டி20 போட்டிகள், இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராவதை பாதிக்காது என அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் மிகப் பெரிய தொடராக இருக்கப் போகிறது. சொந்த மண்ணில் இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்படும். அவர்களுக்கு எதிரான இந்த தொடரை ஆவலாக எதிர்நோக்கி காத்திருக்கிறேன். போட்டி அட்டவணைகள் குறித்து பெரிதாக கவலையில்லை. இந்த டி20 தொடர் மிகவும் சுவாரசியமானதாக இருக்கப் போகிறது என நினைக்கிறேன்.

இந்திய அணிக்கு எதிராக சில ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளோம். அந்த போட்டிகளுக்காகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். அதிக அளவிலான டி20 போட்டிகளில் விளையாடுவது, இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராவதை பாதிக்காது என்றார்.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பிரண்டன் மெக்கல்லம், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பை தொடங்குகிறார்.

அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர், ஒருநாள் வடிவிலான போட்டிகளாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT