ஜஸ்பிரித் பும்ரா (கோப்புப் படம்) படம் | ஐசிசி
கிரிக்கெட்

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருது வென்றது குறித்து மனம் திறந்த ஜஸ்பிரித் பும்ரா!

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றது குறித்து இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மனம் திறந்துள்ளார்.

DIN

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றது குறித்து இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மனம் திறந்துள்ளார்.

ஐசிசியின் கடந்த ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான சர் கர்ஃபீல்டு சோபர்ஸ் விருதினை இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார். அதேபோல, கடந்த ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதினையும் அவர் வென்றுள்ளார். ஐசிசியின் கடந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியிலும் பும்ரா இடம்பிடித்துள்ளார்.

மனம் திறந்த ஜஸ்பிரித் பும்ரா?

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், அணியின் வெற்றிக்கு எப்போதும் முன்னுரிமை கொடுப்பேன் எனவும் ஜஸ்பிரித் பும்ரா மனம் திறந்துள்ளார்.

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றது குறித்து ஜஸ்பிரித் பும்ரா பேசியதாவது: மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இளம் வயதிலிருந்து எனது ஹீரோக்கள் இந்த மிகப் பெரிய ஐசிசி விருதினை வென்றதைப் பார்த்திருக்கிறேன். அதனால், அவர்களுடன் நானும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

டி20 உலகக் கோப்பையை வெல்வது மிகவும் சிறப்பானது. டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது நிறைய மனதுக்கு நெருக்கமான நினைவுகளைக் கொடுத்தது. அதனால், டி20 உலகக் கோப்பையை வென்றதையே மிகவும் மகிழ்ச்சியான தருணம் என முதலில் கூறுவேன். கடந்த ஆண்டில் அதிக அளவிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியது மிகவும் சிறப்பானது என்றார்.

ஐசிசியின் சிறந்த வீரருக்கான சர் கர்ஃபீல்டு சோபர்ஸ் விருதினை வெல்லும் 5-வது இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT