ஆசியக் கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர பொதுக் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 24) வங்கதேசத்தின் டாக்காவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆசியக் கோப்பை தொடர் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலைச் சேர்ந்த 25 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் பிசிசிஐ துணைப் பொதுச் செயலர் ராஜீவ் சுக்லா கலந்துகொண்டார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையில் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் போரை தொடர்ந்து இந்திய அணி, பாகிஸ்தானுடன் எந்தப் போட்டியிலும் விளையாடாது எனத் தெரிவித்திருந்தது. முன்னதாக பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி விளையாடாமல், இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், இந்தத் தொடரிலும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைத் தொடர் செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முன்னதாகவும் இந்தப் போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங், வங்கதேசம் ஆகிய அணிகள் இந்தத் தொடரில் விளையாடவுள்ளன.
இதையும் படிக்க : காயமடைந்தாலும் ரிஷப் பந்த் பேட்டிங் செய்வார்..! - பிசிசிஐ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.