விராட் கோலி - ரோஹித் சர்மா 
கிரிக்கெட்

5 டி20, 3 ஒருநாள்..! இந்திய அணியின் இங்கிலாந்து தொடர் அட்டவணை வெளியீடு!

இந்திய அணியின் இங்கிலாந்து தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா - இங்கிலாந்து இடையிலான அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20, ஒருநாள் தொடருக்கான அட்டவணையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மேலும், இந்திய மகளிரணியும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், அடுத்தாண்டு இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் தொடருக்கான அட்டவணையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

இந்திய அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருக்கிறது. ஜூலை 1 ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் 19 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்திய ஆடவர் அணியைத் தொடர்ந்து இந்திய மகளிரணியும் 3 டி20 போட்டிகள் மற்றும் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

நாட் ஸ்கைவர்-பிரண்ட் - ஹர்மன்ப்ரீத் கௌர்.

டி20 தொடருக்கான அட்டவணை

  • முதலாவது டி20 போட்டி - துர்ஹாம் - ஜூலை 1

  • 2-வது டி20 போட்டி - மான்செஸ்டர் - ஜூலை 4

  • 3-வது டி20 போட்டி - நாட்டிங்காம் - ஜூலை 7

  • 4-வது டி20 போட்டி - பிரிஸ்டல் - ஜூலை 9

  • 5-வது டி20 போட்டி - சௌதாம்ப்டன் - ஜூலை 11

ஒருநாள் தொடருக்கான அட்டவணை

  • முதலாவது ஒருநாள் போட்டி - பர்மிங்காம் - ஜூலை 14

  • 2-வது ஒருநாள் போட்டி - கார்டிப் - ஜூலை 16

  • 3-வது ஒருநாள் போட்டி - லார்ட்ஸ் - ஜூலை 19

மகளிரணி டி20 தொடருக்கான அட்டவணை

  • முதலாவது டி20 போட்டி - செல்ஸ்போர்டு - மே 28

  • 2-வது டி20 போட்டி - பிரிஸ்டல் - மே 30

  • 3-வது டி20 போட்டி - டௌடன் - ஜூன் 2

ஒரேயொரு டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

Indian men's team to play 5 T20s, 3ODIs in England in 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT