இங்கிலாந்து - மே.இ.தீ. கேப்டன் படம்: ஈசிபி
கிரிக்கெட்

போக்குவரத்து பாதிப்பால் தாமதமாகும் இங்கிலாந்து - மே.இ.தீ. போட்டி!

போக்குவரத்து பாதிப்பினால் இங்கிலாந்து - மே.இ.தீ. போட்டி தாமதாகியுள்ளது குறித்து...

DIN

போக்குவரத்து பாதிப்பால் இங்கிலாந்து - மே.இ.தீ. அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி தாமதமாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மே.இ.தீ. அணி 3 ஒருநாள், 3டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் 2 ஒருநாள் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் கடைசி போட்டி இன்று ஓவல் திடலில் நடைபெற இருந்தது.

இந்தப் போட்டிக்கு வந்துகொண்டிருந்த மே.இ.தீ. அணி கடுமையான போக்குவரத்து பாதிப்பில் சிக்கிக் கொண்டதால் 30 நிமிஷங்கள் போட்டி தாமதமாகியுள்ளது.

இங்கிலாந்து அணி ஏற்கனவே இந்தத் தொடரில் 2-0 என வெற்றி பெற்றுள்ளது. கடைசி போட்டியிலும் வென்று 3-0 என ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இங்கிலாந்து அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ஜாஸ் பட்லர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு ஹாரி புரூக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் முதல் தொடரிலேயே பல சாதனைகளை செய்து வருகிறது.

அடுத்ததாக, இவ்விரு அணிகளுக்கான டி20 போட்டிகள் ஜூன்.6 ஆம் தேதி தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

SCROLL FOR NEXT