சதமடித்த மகிழ்ச்சியில் பென் டக்கெட் கொண்டாட்டம்...  படம்: ஏபி
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிராக வரலாறு படைத்த பென் டக்கெட்!

இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் நிகழ்த்திய சாதனை குறித்து...

DIN

இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் இந்தியாவுக்கு எதிராக புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 471 சேர்க்க, இங்கிலாந்து 465 சேர்த்தது. இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா 364 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்தது. அதிலும் பென் டக்கெட் சதம் அடித்து அசத்தலாக விளையாடி வந்தார். ஷர்துல் ஓவரில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணி 58.3 ஓவர்களில் 269/4 ரன்கள் எடுத்துள்ளது. மழை வந்ததால் தேநீர் இடைவேளை விடப்பட்டது.

170 பந்துகளில் பென் டக்கெட் 149 ரன்கள் குவித்தார். இதில் 21 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடங்கும்.

இந்தியாவுக்கு எதிராக சேஸிங்கில் 4-ஆவது இன்னிங்ஸில் அதிகபட்ச ரன்களை குவித்து வரலாறு படைத்துள்ளார்.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள்

149 - பென் டக்கெட் - ஹெடிங்லே, 2025

142* - ஜோ ரூட் - எட்ஜ்பாஸ்டன், 2022

134 - ஃபாப் டு பிளெஸ்ஸி - ஜோபர்க், 2013

124 - துலீப் மெண்டிஸ் - கண்டி , 1985

122* - டேரில் குலினன் - ஜோபர்க், 1997

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ் எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருது! முதல்வர் வழங்கினார்!

2025 முடிய 6 வாரங்களே! அதற்குள் எடைகுறைய 5 வழிகள்!!

புதுச்சேரி பனித்திட்டு பகுதி கடலில் முதல் முறையாக பயிரிடப்பட்ட கடற்பாசி அறுவடை!

கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த கோவா அரசு நடவடிக்கை: முதல்வர் சாவந்த்

போலீஸ் பணிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டோா் சான்றிதழ், ஆவணங்களுடன் அணுகலாம்!

SCROLL FOR NEXT