விராட் கோலி படம் | AP
கிரிக்கெட்

விராட் கோலிக்கு முன்னாள் மே.இ.தீவுகள் வீரர் புகழாரம்!

விராட் கோலியின் போராட்ட குணமும் கிரிக்கெட்டின் மீதான அதீத ஆர்வமும் அவரை மிகப் பெரிய வீரராக மாற்றியுள்ளது.

DIN

விராட் கோலியின் போராட்ட குணமும் கிரிக்கெட்டின் மீதான அதீத ஆர்வமும் அவரை மிகப் பெரிய வீரராக மாற்றியுள்ளதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டி இந்திய அணிக்காக விராட் கோலி விளையாடும் 300-வது ஒருநாள் போட்டியாகும்.

விவ் ரிச்சர்ட்ஸ் பாராட்டு

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில், விராட் கோலியின் போராட்ட குணமும் கிரிக்கெட்டின் மீதான அதீத ஆர்வமும் அவரை மிகப் பெரிய வீரராக மாற்றியுள்ளதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி அவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் நம் அனைவருக்கும் பதிலளிப்பதாக நினைக்கிறேன். உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி சரியாக விளையாடவில்லை. அதன் பின், மீண்டும் சிறப்பான ஃபார்மில் விளையாடி வருகிறார். இதன் காரணமாகவே அவரை மிகப் பெரிய லெஜண்டரி வீரர் எனக் கூறுகிறேன்.

மோசமான ஃபார்மிலிருந்து மீண்டு அனைவராலும் இதுபோன்று விளையாட முடியாது. விராட் கோலியின் போராட்ட குணமும், கிரிக்கெட்டின் மீதான அதீத ஆர்வமும் அவரை சிறப்பாக செயல்பட வைக்கிறது. ஃபீல்டிங்கில் அவர் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவது அவர் எந்த அளவுக்கு போட்டியின் மீது ஆர்வமாக இருக்கிறார் என்பதை பிரதிபலிக்கிறது. விராட் கோலி அவர் மீது 120 சதவிகிதம் நம்பிக்கை வைத்துள்ளார் என்றார்.

இந்திய அணிக்காக 300-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் 7-வது வீரர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT