மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மே 13) அறிவித்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகிற மே 29 ஆம் தேதி நடைபெறுகிறது.
இங்கிலாந்து அணி அறிவிப்பு
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
ஒருநாள் மற்றும் டி20 என இரண்டிலுமே ஹாரி ப்ரூக் கேப்டனாக இங்கிலாந்து அணியை வழிநடத்தவுள்ளார். அவரது தலைமையில் இங்கிலாந்து அணி முதல் முறையாக விளையாடவுள்ளது.
ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்
ஹாரி ப்ரூக் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், டாம் பான்டான், ஜேக்கோப் பெத்தேல், ஜோஸ் பட்லர், பிரைடான் கார்ஸ், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், சாக்யூப் மஹ்முத், மேத்யூ பாட்ஸ், ஜேமி ஓவர்டான், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜேமி ஸ்மித்.
டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்
ஹாரி ப்ரூக் (கேப்டன்), ரிஹான் அகமது, டாம் பான்டான், ஜேக்கோப் பெத்தேல், ஜோஸ் பட்லர், பிரைடான் கார்ஸ், லியாம் டாஸன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், சாக்யூப் மஹ்முத், மேத்யூ பாட்ஸ், ஜேமி ஓவர்டான், அடில் ரஷீத், பில் சால்ட், லூக் வுட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.