இங்கிலாந்துக்கு லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்தியா ஏ அணியை பிசிசிஐ இன்று (மே 16) அறிவித்துள்ளது.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி தொடங்குகிறது.
இதையும் படிக்க: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் யார்? வாசிம் ஜாஃபர் கூறுவதென்ன?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் மே 30 முதல் தொடங்குகிறது.
இந்தியா ஏ அணியில் தேசிய அணிக்காக விளையாடும் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் துருவ் ஜுரெல் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாகக் கூறப்படும் ஷுப்மன் கில், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்தியா ஏ அணியுடன் இணைவார். இரண்டாவது போட்டியில் சாய் சுதர்சனும் அணியில் இணையவுள்ளார்.
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இந்தியா ஏ அணி விவரம்
அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜுரெல் (துணைக் கேப்டன்), நிதீஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்குர், இஷான் கிஷன், மானவ் சுதர், தனுஷ் கோட்டியான், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, ருதுராஜ் கெய்க்வாட், சர்ஃபராஸ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.