படம் | வங்கதேச கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

பாகிஸ்தான் - வங்கதேசம் டி20 தொடர்: 5 போட்டிகள் அல்ல; 3 போட்டிகளாக குறைப்பு!

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் போட்டிகள் குறைக்கப்பட்டுள்ளன.

DIN

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் போட்டிகள் குறைக்கப்பட்டுள்ளன.

வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மே 25 முதல் ஜூன் 3 வரையிலான இடைவெளியில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதாக இருந்தது. தற்போது, இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் 3 போட்டிகள் கொண்ட தொடராக மாற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியங்கள் ஒன்றாக இணைந்து டி20 தொடரின் அட்டவணையில் மாற்றம் செய்துள்ளன. தொடரின் மூன்று போட்டிகளையும் லாகூரிலுள்ள கடாஃபி திடலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், போட்டிகள் நடைபெறும் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. அந்த தொடரின் இறுதிப்போட்டி வருகிற மே 25 ஆம் தேதி நடைபெறவுள்ளதால், பாகிஸ்தான் - வங்கதேசத்துக்கு இடையிலான டி20 தொடருக்கான அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வங்கதேசம் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

SCROLL FOR NEXT