ஆஷஸ் தொடரை வெல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை வெல்ல வேண்டிய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பென் ஸ்டோக்ஸ் விளையாடும் விதம், அவரது அணுகுமுறை ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, ஆஷஸ் தொடரை வெல்ல இதுவே சரியான தருணம் என நினைக்கிறேன். பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக செயல்பட்டு ஆஷஸ் தொடரை வெல்ல வேண்டும். அவர் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதற்காக இதனை நான் கூறவில்லை. ஆஷஸ் தொடரை கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்பது குறித்துதான் இங்கிலாந்து அணிக்குள்ளும் ஆலோசனை நடந்து கொண்டிருக்கும். ஆஷஸ் தொடரை கண்டிப்பாக வெல்ல வேண்டுமென இங்கிலாந்து வீரர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆஷஸ் தொடரை வெல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.
நேர்மையாக கூறவேண்டுமென்றால், இங்கிலாந்து அணிக்கு கண்டிப்பாக கோப்பை தேவைப்படுகிறது. கடந்த சில தொடர்கள் இங்கிலாந்து அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. கடந்த 2010-11 ஆம் ஆண்டுகளில் மட்டுமே இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய மண்ணில் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றி நான் பார்த்திருக்கிறேன். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஆஷஸ் தொடரை இந்த முறை இங்கிலாந்து அணி வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஹாரி ப்ரூக் (துணைக் கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், சோயப் பஷீர், ஜேக்கோப் பெத்தேல், பிரைடான் கார்ஸ், ஸாக் கிராலி, பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஆலி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங், மார்க் வுட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.