ர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சிறந்த வீரர்களுக்கான போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் மூவர் இடம்பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு ஐசிசியின் சிறந்த வீரர் / வீராங்கனை விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் பாகிஸ்தானின் நோமன் அலி, ஆப்கானிஸ்தானின் ரஷீத்கான், தென்னாப்பிரிக்காவின் செனுரன் முத்துசாமி உள்ளிட்ட மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 31 வயதான சுழற்பந்து வீச்சாளர் செனுரன் முத்துசாமி, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை சமன் செய்வதில் முக்கியப் பங்காற்றினார். முதல் டெஸ்ட்டில் 11 விக்கெட்டுகளை அள்ளினார். இருப்பினும், தென்னாப்பிரிக்க அணி அந்தப் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
முதல் போட்டியில் பந்துவீச்சில் அசத்தியது போலவே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் 89 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்க அணியை சரிவில் இருந்து மீட்டார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் நோமன் அலி. லாகூரில் நடந்த முதல் டெஸ்டில், இரண்டு இன்னிங்ஸ்களிலும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ராவல்பிண்டியில் நடைபெற்ற டெஸ்டில், நோமன் அலி சிறப்பாக விளையாடி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் பேட்டிங்கிலும் 17 ரன்கள் எடுத்திருந்தார்.
ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீத்கான், அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த மாதத்தில் ரஷீத்கான் விளையாடிய ஐந்து டி20 போட்டிகளில், 4.82 எகானமி ரேட்டுடன் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 4 விக்கெட்டுகளையும் ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரஷீத்கான் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியும், வங்கதேச அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்தத் தொடரில் முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், இரண்டாவது போட்டியில் 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.