மழையால் ஆட்டம் ரத்து: தொடரை வென்றது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்ற இந்திய அணி குறித்து...
மழையின் காரணமாக கடைசி டி20 போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என வென்றது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியும் கடைசி போட்டியும் மழையினால் ரத்து செய்யப்பட்டது.
மீதமிருந்த 3 போட்டிகளில் இந்திய அணி 2-1 என வென்று தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி தொடர்ச்சியாக டி20 தொடர்களில் வென்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
summary