வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் அயர்லாந்து அணி 270 ரன்கள் குவித்துள்ளது.
வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹட்டில் இன்று (நவம்பர் 11) தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் அயர்லாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் இருவர் அரைசதம் கடந்து அசத்தினர். பால் ஸ்டிரிலிங் 60 ரன்களும், கேட் கார்மைக்கேல் 59 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, கர்டிஸ் கேம்ஃபர் 44 ரன்களும், லோர்கான் டக்கர் 41 ரன்களும் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் மெஹிதி ஹாசன் மிராஸ் 3 விக்கெட்டுளையும், ஹாசன் முரத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஹாசன் மஹ்முத், நஹித் ராணா மற்றும் தைஜுல் இஸ்லாம் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
பேரி மெக்கார்த்தி 21 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான தொடர் ஒருபோதும் எளிதாக இருக்காது; தென்னாப்பிரிக்காவை எச்சரிக்கும் கங்குலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.