பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் இன்று (நவம்பர் 14) நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை அணி முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் ஜனித் லியாநாகே அரைசதம் அடித்தார். அவர் 63 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கமிந்து மெண்டிஸ் 44 ரன்களும், சதீரா சமரவிக்கிரம 42 ரன்களும் எடுத்தனர். வனிந்து ஹசரங்கா 37 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரௌஃப் மற்றும் அப்ரார் அகமது தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகமது வாசிம் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.