ரிஷப் பந்த் - ரவீந்திர ஜடேஜா.  படம்: பிசிசிஐ
கிரிக்கெட்

கொல்கத்தா டெஸ்ட்: இந்தியா 189-க்கு ஆல் அவுட்..! ஷுப்மன் கில் காயத்தால் வெளியேற்றம்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் முதல் டெஸ்ட் போட்டி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் காயம் காரணமாக பேட்டிங்கில் பாதியிலேயே வெளியேறினார்.

கொல்கத்தாவில் நேற்று (நவ.14) தொடங்கிய இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் அந்த அணி 159க்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாம் நாளான இன்று இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 ரன்கள் எடுத்தார்.

தெ.ஆ. அணியில் ஹார்மர் 4, யான்சென் 3, மகாராஜ், போஷ் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

தற்போது, தெ.ஆ. அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. ஷுப்மன் கில்-க்கு பதிலாக படிக்கல் ஃபீல்டிங் செய்கிறார்.

தேநீர் இடைவேளை வரை 6.4 ஓவர்களில் தெ.ஆ. அணி 18/1 ரன்கள் எடுத்துள்ளது. மார்க்ரம் 3 ரன்களுடன் இருக்கிறார்.

ரியான் ரிக்கெல்டன் விக்கெட்டை குல்தீப் யாதவ் எடுத்து அசத்தினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 12 ரன்கள் பின்னிலையில் இருக்கிறது.

India were all out for 189 runs in the first Test against South Africa.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாரணாசி வெளியீட்டுத் தேதியை உறுதி செய்தார் ராஜமௌலி!

சுற்றுலா என்றாலே வியட்நாம், சிங்கப்பூர் என்றில்லை: சுற்றுலா பதிவர் கார்த்திக் முரளி!

மகாத்மா காந்தி நினைவு நாள்! RN Ravi மரியாதை!

இது தெரியுமா? தொலைபேசியை எடுத்தவுடன் ஹலோ என்று சொல்வது ஏன்?

சேட்டன் வருகிறார் வழி விடுங்க... சாம்சனுக்குப் பாதுகாவலராக மாறிய சூர்யகுமார்!

SCROLL FOR NEXT