கோப்புப் படம் 
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (நவம்பர் 21) அறிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (நவம்பர் 21) அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பின் ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் தொடங்கவுள்ள நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (நவம்பர் 21) அறிவித்துள்ளது.

ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை டெம்பா பவுமாவும், டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அய்டன் மார்க்ரமும் கேப்டனாக வழிநடத்தவுள்ளனர். இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நவம்பர் 30 ஆம் தேதியும், டி20 தொடர் டிசம்பர் 9 ஆம் தேதியும் தொடங்குகிறது.

ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம்

டெம்பா பவுமா (கேப்டன்), ஓட்டெனில் பார்ட்மேன், கார்பின் போஸ்ச், மேத்யூ ப்ரீட்ஸ்க், டெவால்ட் பிரேவிஸ், நண்ட்ரே பர்கர், குயிண்டன் டி காக், டோனி டி ஸார்ஸி, ரூபின் ஹெர்மேன், மார்கோ யான்சென், கேசவ் மகாராஜ், அய்டன் மார்க்ரம், லுங்கி இங்கிடி, ரியான் ரிக்கல்டான், பிரேநெலான் சுப்ராயன்.

டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம்

அய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஓட்டெனில் பார்ட்மேன், கார்பின் போஸ்ச், டெவால்ட் பிரேவிஸ், குயிண்டன் டி காக், டோனி டி ஸார்ஸி, டோனோவன் ஃபெரைரா, ரீஸா ஹென்ரிக்ஸ், மார்கோ யான்சென், ஜியார்ஜ் லிண்டே, கேசவ் மகாராஜ், குவெனா மபாகா, டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, ஆண்ட்ரிச் நார்ட்ஜே, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

The South African Cricket Board announced the squad for the ODI and T20 series against India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT