வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்துள்ளது.
அயர்லாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி சட்டோகிராமில் இன்று (நவம்பர் 27) நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அயர்லாந்து முதலில் விளையாடியது.
ஹாரி டெக்டார் அரைசதம்
முதலில் விளையாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி டெக்டார் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 45 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டிம் டெக்டார் 32 ரன்களும், கர்டிஸ் கேம்ஃபர் 24 ரன்களும் எடுத்தனர். கேப்டன் பால் ஸ்டிரிலிங் 21 ரன்கள் எடுத்தார்.
வங்கதேசம் தரப்பில் தன்சிம் ஹாசன் சாகிப் 2 விக்கெட்டுகளையும், ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் விளையாடி வருகிறது.
இதையும் படிக்க: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்: ரிஷப் பந்த்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.