படம் | AP
கிரிக்கெட்

முத்தரப்பு டி20 தொடர் இறுதிப்போட்டி: பாகிஸ்தானுக்கு 115 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று (நவம்பர் 29) ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் கமில் மிஷாரா அரைசதம் கடந்தார். அவர் 47 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, குசல் மெண்டிஸ் 14 ரன்களும், பதும் நிசங்கா 11 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் ஷா அஃப்ரிடி மற்றும் முகமது நவாஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். அப்ரார் அகமது 2 விக்கெட்டுகளையும், சல்மான் மிர்ஸா மற்றும் சைம் ஆயுப் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

In the final match of the Trilateral T20 series against Pakistan, Sri Lanka were bowled out for 114 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேள்பாரியைத் தயாரிக்கும் பாலிவுட் நிறுவனம்?

தமிழிசை சௌந்தரராஜனின் சொந்த தொகுதி எது? தவெக நிர்மல்குமார் கேள்வி!

அஜீத் பவார் இல்லை! என்னவாகும் தேசியவாத காங்கிரஸ்?

பாஜக கவுன்சிலர் சௌரப் ஜோஷி சண்டீகரின் புதிய மேயராகத் தேர்வு!

அஜீத் பவார் உடல் தகனம்!

SCROLL FOR NEXT