உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
உலகக் கோப்பைத் தொடரில் குவாஹாட்டியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, வங்கதேசம் முதலில் பேட் செய்தது.
178 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
முதலில் விளையாடிய வங்கதேசம் 49.4 ஓவர்களில் 178 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் சோபனா மொஸ்டாரி அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ரபேயா கான் 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். ஷர்மின் அக்தர் 30 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்கல்ஸ்டோன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லின்ஸி ஸ்மித், சார்லி டீன் மற்றும் அலைஸ் கேஸ்ஸி தலா இரண்டு விக்கெட்டுகளையும், லாரென் பெல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.