ஜிம்பாப்வே அணியினர். 
கிரிக்கெட்

ஆப்கன் விலகல்! முத்தரப்பு தொடரில் ஜிம்பாப்வே சேர்ப்பு!

ஆப்கானிஸ்தான் அணி விலகியதால் முத்தரப்பு தொடரில் ஜிம்பாப்வே சேர்க்கப்பட்டுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

முத்தரப்பு டி20 தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி விலகியதால் ஜிம்பாப்வே அணி சேர்க்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட மூன்று அணிகளும் டி20 முத்தரப்பு தொடரில் விளையாடவிருந்தன. இந்தத் தொடர் நவம்பர் 17 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை லாகூரில் நடைபெறவிருந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான தாக்குதலில் பாகிஸ்தானின் 100-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியாகினார். அதன்பின்னர், 48 மணிநேர போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

போர் நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான் ராணுவம், ஆப்கானிஸ்தானின் பாக்டிக்கா மாகாணம் உர்குன் பகுதியில் வான்வெளித் தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் நடத்திய கொடூரத் தாக்குதலில் உர்குனில் இருந்து சரானாவுக்கு கிழக்கு பாக்டிக்கா மாகாணம் வழியாக நட்புறவு கிரிக்கெட் போட்டியில் விளையாடச் சென்ற வீரர் கபீர், சிப்கதுல்லா, ஹாரூன் உள்பட 17 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் பலியான விவகாரத்தில், கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் அணி, முத்தரப்பு தொடரில் இருந்தும் விலகியுள்ளது.

இதனால், டி20 முத்தரப்புத் தொடரில் ஆப்கானிஸ்தானுக்குப் பதிலாக ஜிம்பாப்வே அணி விளையாடும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Zimbabwe Replace Afghanistan In Pakistan Tri-Series Amid Controversy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT