பாகிஸ்தான் ஒருநாள் தொடர் (ஒடிஐ) கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து முஹம்மது ரிஸ்வான் நீக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் ஒருநாள் தொடர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷாஹீன் ஷா அஃப்ரிடி நியமிக்கப்படுவதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இருப்பினும், முன்னாள் கேப்டன் முஹம்மது ரிஸ்வான் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து, வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் முஹம்மது ரிஸ்வானின் பெயர் குறிப்பிடப்படவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் மற்றும் தேர்வுக் குழு இடையிலான ஆலோசனைகளுக்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டிகளில், பாகிஸ்தான் அணிக்கு ஷாஹீன் ஷா அஃப்ரிடி கேப்டனாக தலைமை வகித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மகளிர் உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.