இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு 341 ரன்கள் இலக்கு... படம் - ஏபி
கிரிக்கெட்

இந்திய வீராங்கனைகள் அசத்தல்! மழையால் ஓவர்கள் குறைப்பு.. நியூசிலாந்துக்கு 325 ரன்கள் இலக்கு!

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 49 ஓவர்களில் 340 ரன்களை குவித்துள்ளது...

இணையதளச் செய்திப் பிரிவு

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு 325 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகின்றது. நவி மும்பையில் இன்று (அக். 23) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரத்திகா ராவல் கூட்டணி, 201 பந்துகளில் 212 ரன்களை குவித்தது.

இதில், பிரத்திகா ராவல் 134 பந்துகளில் 122 ரன்களையும், ஸ்மிருதி மந்தனா 95 பந்துகளில் 109 ரன்களையும் எடுத்து அசத்தினர். மேலும், வீராங்கனை ஜெர்மிமா ரோட்ரிக்ஸ் 55 பந்துகளில் 76 ரன்களை எடுத்துள்ளார். ஆனால், திடீரென மழை பெய்ததால் ஆட்டம் 48 ஓவர்களில் நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர், மழை நின்றதும் மீண்டும் துவங்கப்பட்ட நிலையில், ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதன்மூலம், இந்திய அணி 49 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 340 ரன்களை எடுத்து அசத்தியுள்ளது.

ஆனால், தொடர்ந்து மழை பெய்து வருவதால், சுமார் 1.5 மணிநேரம் போட்டி தாமதமாகியுள்ளது. இதனால், ஆட்டம் 44 ஓவர்களாகவும், நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு இலக்கு, 325 ரன்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பட்டியலில் முதல் மூன்று இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. 4 ஆவது இடத்தில் இருக்கும் இந்திய அணி, அரை இறுதிக்குச் செல்ல இந்த ஆட்டத்தின் வெற்றி முக்கியமானதாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நியூசிலாந்தை திணறடித்த இந்திய வீராங்கனைகள்! ஆட்டத்தை நிறுத்திய மழை!

New Zealand have been set a target of 341 runs against India in the Women's ODI World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உடான்’-உதாா் அல்ல!

செங்கம் நகரில் குண்டும் குழியுமான சாலைகள்: பொதுமக்கள் அவதி

குடியிருப்புகளுக்குள் தேங்கிய மழை நீா்: புதிய கால்வாய் அமைத்து வெளியேற்றம்

மின்மாற்றிகள் கொள்முதல்: உயரழுத்த மின் இணைப்பு கோரும் நுகா்வோருக்கு மின்வாரியம் அனுமதி

மாநிலம் முழுவதும் ஒரே பதிவு முறை: கட்டட பொறியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை

SCROLL FOR NEXT