நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அசத்தல்.. படம் - ஏபி
கிரிக்கெட்

நியூசிலாந்தை திணறடித்த இந்திய வீராங்கனைகள்! ஆட்டத்தை நிறுத்திய மழை!

மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் குறித்து..

இணையதளச் செய்திப் பிரிவு

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியில், மழையால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகின்றன. நவி மும்பையில் இன்று (அக். 23) நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களமிறங்கிய இந்திய வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரத்திகா ராவல் இருவரும் இணைந்து 201 பந்துகளில் 212 ரன்களை குவித்தனர்.

இதில், இருவரும் சதம் விளாசிய நிலையில், வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா 95 பந்துகளில் 109 ரன்களிலும், பிரத்திகா ராவல் 134 பந்துகளில் 122 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர், களமிறங்கிய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 51 பந்துகளில் 69 ரன்களை எடுத்து அசத்தியுள்ளார்.

இதன்மூலம், இந்திய அணி 48 ஓவர்கள் முடிவில் வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து 329 ரன்களை எடுத்துள்ளது. ஆனால், மழை பெய்து வருவதால் சுமார் 1 மணிநேரமாக ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மகளிர் உலகக் கோப்பை: சதம் விளாசினார் ஸ்மிருதி மந்தனா!

The Women's ODI World Cup match between India and New Zealand has been temporarily suspended due to rain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 5 நாள்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

உலகம் முழுவதும் உருவாகிறது ஒயர்லெஸ் சார்ஜிங் சாலைகள்! இந்தியாவில்?

கவினின் மாஸ்க் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

திருவாலங்காடு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்

மாந்தோப்பில் நின்றிருந்தேன்... கௌரி ஸ்ருதி!

SCROLL FOR NEXT