முகப்பு
கிரிக்கெட்

2-வது டி20: ரஷித் கான் அபார பந்துவீச்சு; 125 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஜிம்பாப்வே!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Updated On : 31 அக்டோபர், 2025 at 1:29 PM
ரஷித் கான்
பகிர்:

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (அக்டோபர் 31) நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 19.3 ஓவர்கள் முடிவில் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ராஸா 32 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டோனி முனியோங்கா 19 ரன்களும், பிரையன் பென்னட் 16 ரன்களும் எடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் ரஷித் கான் 3 ஓவர்களில் வெறும் 9 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முஜீப் உர் ரஹ்மான் மற்றும் அப்துல்லா அகமதுசாய் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஃபரீத் அகமது மாலிக் மற்றும் முகமது நபி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

summary

Zimbabwe, who batted first in the second T20I against Afghanistan, were bowled out for 125 runs.

முழு கட்டுரையைப் படிக்க →