இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20யில் தென்னாப்பிரிக்க அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மழையினால் பாதிக்கப்பட்ட போட்டி டிஎல்எஸ் விதியின்படி ஓவர்கள் குறைக்கப்பட்டு விளையாடப்பட்டது.
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி ஒருநாள் தொடரை 2-1 என வென்றது.
டி20 தொடரில் முதல் போட்டியில் நேற்றிரவு மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தெ.ஆ. அணி 7.5 ஓவரில் 97/5 ரன்கள் குவிக்க மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
அதிரடியாக ஆடிய மார்க்ரம் 28, பிரெவிஸ் 23, டோனவன் ஃபெரேரா 28 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து 5 ஓவர்களில் 69 ரன்கள் தேவை என விளையாடிய இங்கிலாந்து 54 ரன்கள் மட்டுமே எடுக்க, 14 ரன்கள் வித்தியாசத்தில் தெ,ஆ, வென்றது.
இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 25 ரன்கள் எடுத்தார்.
11 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த டோனவன் ஃபெரேரா ஆட்ட நாயகனாக தேர்வானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.