முகப்பு
கிரிக்கெட்

உலகக் கோப்பையை வெல்வதில் மட்டுமே கவனம், பாதுகாப்பு மீது நம்பிக்கை உள்ளது: ஆஸி. கேப்டன்

டி20 உலகக் கோப்பையை வெல்வதில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது நம்பிக்கை இருப்பதாகவும் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

Updated On : 3 பிப்ரவரி 2026, 3:45 pm IST
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் - படம் | AP
பகிர்:

டி20 உலகக் கோப்பையை வெல்வதில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது நம்பிக்கை இருப்பதாகவும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் 10-வது சீசன் வருகிற பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவற்கு முன்பாகவே, இந்த உலகக் கோப்பைத் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களைக் கூறி வங்கதேசம் இந்தியாவில் விளையாட மறுத்த நிலையில், அந்த அணிக்குப் பதிலாக ஸ்காட்லாந்து மாற்று அணியாக சேர்க்கப்பட்டது. டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் நீக்கப்பட்டதால், வங்கதேச அணிக்கு ஆதரவாக இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.

Advertisement

Advertisement

டி20 உலகக் கோப்பையை வெல்வதில் மட்டுமே கவனம்

இன்னும் ஓரிரு நாள்களில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், டி20 உலகக் கோப்பையை வெல்வதில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது நம்பிக்கை இருப்பதாகவும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, தொடரை 0-3 என முழுமையாக இழந்தது. அதன் பின், நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் டி20 உலகக் கோப்பை குறித்தும், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளின் முடிவு குறித்தும் மிட்செல் மார்ஷிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளித்ததாவது: டி20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பது தொடர்பாக வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளின் முடிவுகள் குறித்து தற்போது என்னிடம் கூறுவதற்கு ஒன்றுமில்லை. டி20 உலகக் கோப்பையை வெல்லும் எண்ணத்துடன் மட்டுமே நாங்கள் இந்த உலகக் கோப்பைத் தொடருக்கு செல்லவிருக்கிறோம். ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்பை உலகக் கோப்பையை நடத்தும் நாட்டிலுள்ள மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த விஷயத்தில் என்னால் இவ்வளவுதான் கூறமுடியும் என்றார்.

summary

Mitchell Marsh has stated that he is focused solely on winning the T20 World Cup and that he has confidence in the security arrangements.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.