ஐபிஎல்

விடியோ வெளியிட்டு தந்தையான செய்தியை உலகுக்கு சொன்ன பிரபல வீரர் பேட் கம்மின்ஸ்

குழந்தையின் வரவுக்காக ஐபிஎல் போட்டியில் பங்கேற்காத கம்மின்ஸ், தற்போது உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்காக....

DIN

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்ட பிறகு வேறு எந்த கிரிக்கெட் ஆட்டத்திலும் ஆஸி. வீரர் கம்மின்ஸ் பங்கேற்கவில்லை. கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த கம்மின்ஸ், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியிலும் பங்கேற்கவில்லை. 

பெக்கி பாஸ்டனைப் பல வருடங்களாகக் காதலித்து வருகிறார் கம்மின்ஸ். கடந்த ஏப்ரல் மாதம், விரைவில் குழந்தை பிறக்கவிருக்கும் தகவலைத் தெரிவித்தார் பெக்கி பாஸ்டன். இந்நிலையில் ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார் கம்மின்ஸ். இதுதொடர்பாக விடியோ வெளியிட்டு தன்னுடைய சந்தோஷத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அக்டோபர் 8 அன்று பிறந்த குழந்தைக்கு அல்பி பாஸ்டன் கம்மின்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

குழந்தையின் வரவுக்காக ஐபிஎல் போட்டியில் பங்கேற்காத கம்மின்ஸ், தற்போது உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்காக இன்று துபைக்குக் கிளம்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT