ஐபிஎல்

அதிக சிக்ஸர்களும் ரன் எடுக்காத பந்துகளும்: ஐக்கிய அரபு அமீரகத்தில் அசத்தி வரும் ருதுராஜ்

அதிக சிக்ஸர்கள், அதிக பவுண்டரிகள் அடித்தவர் என்கிற பெருமை ருதுராஜுக்கு கிடைத்துள்ளது.

DIN

ஐபிஎல் 2021 போட்டியின் 2-ம் பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இன்னும் இரு ஆட்டங்களில் போட்டி முடிவடையவுள்ளது.

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. பிறகு இந்தியாவில் ஐபிஎல் 2021 போட்டி தொடங்கியது. எனினும் பாதி போட்டி முடிவடைந்த நிலையில் சில வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கியது.

ஐபிஎல் 2021 போட்டியின் 2-ம் பகுதியில் வேறு எந்த பேட்ஸ்மேனையும் விடவும் ருதுராஜ் கெயிக்வாட் அசத்திக்கொண்டிருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் போட்டியில் அதிக சிக்ஸர்கள், அதிக பவுண்டரிகள் அடித்தவர் என்கிற பெருமை ருதுராஜுக்கு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிகப் பந்துகளில் ரன் எடுக்காததும் (டாட் பால்) ருதுராஜ் தான்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021

அதிக பந்துகளில் ரன் எடுக்காதவர் - 96 பந்துகள் (ருதுராஜ்)
அதிகமுறை 1 ரன் எடுத்தவர் - 118 (ருதுராஜ்)
அதிகமுறை 2 ரன்கள் எடுத்தவர் - 18 (ருதுராஜ்)
அதிகமுறை 3 ரன்கள் எடுத்தவர்கள் - 2 (ருதுராஜ், ஜேசன் ராய், இஷான் கிஷன்)
அதிகமான பவுண்டரிகள் எடுத்தவர் - 36 (ருதுராஜ்)
அதிகமான சிக்ஸர்கள் எடுத்தவர் - 17 (ருதுராஜ்)

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021: ருதுராஜ்

88*, 38, 40, 45, 101*, 13, 12, 70. (கடைசி ஆட்டம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT