கேஜிஎஃப் 2 படத்தை கண்டுகளித்த ஆர்சிபி வீரர்கள் (விடியோ)
இதுகுறித்த படங்கள், விடியோ வெளியாகியுள்ளன.
யாஷ் நடித்த கேஜிஎஃப் 2 படத்தை ஆர்சிபி வீரர்கள் கண்டுகளித்ததாக அணியின் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 2022 போட்டியில் டு பிளெஸ்சிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை எடுத்துள்ளது. புள்ளிகள் பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளது. இன்று லக்னெள அணிக்கு எதிராக மோதுகிறது.
இந்நிலையில் ஆர்சிபி வீரர்கள், யாஷ் நடித்த கேஜிஎஃப் 2 படத்தைக் கண்டுகளித்ததாக அந்த அணி தகவல் தெரிவித்துள்ளது. ஆர்சிபி அணியின் கரோனா தடுப்பு வளையப் பகுதியில் கேஜிஎஃப் 2 படம் திரையிடப்பட்டுள்ளது. இதுகுறித்த படங்கள், விடியோ வெளியாகியுள்ளன.
யாஷ் நடிப்பில் 2018-ல் வெளியான கேஜிஎஃப் என்கிற கன்னடப் படம் இந்திய அளவில் கவனம் பெற்றது. மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். கேஜிஎஃப் படத்தின் 2-ம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள். கேஜிஎஃப் 2 படம் கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. கேஜிஎஃப் 2 படம் முதல் நான்கு நாள்களில் உலகளவில் ரூ. 546 கோடி வசூலித்ததாகப் படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Related Article
ஐபிஎல்-லின் முதல் 30 ஆட்டங்கள்: அதிக சிக்ஸர், பவுண்டரிகளை அடித்த வீரர்கள் யார் யார்?
தில்லி அணியில் ஐந்து பேருக்கு கரோனா: ஐபிஎல் ஆட்டம் பற்றி பிசிசிஐ வெளியிட்ட புதிய அறிவிப்பு
அதிக ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியும் இந்திய அணியில் இடம்பெறாத வீரர்கள் யார் யார்?
டாஸ்: ஐபிஎல் போட்டியில் அணிகளிடம் உள்ள தயக்கம்