ஐபிஎல்

விராட் கோலியின் விக்கெட்: உம்ரான் மாலிக் விருப்பம்

விராட் கோலியின் விக்கெட்டை எடுக்க விருப்பப்படுவதாக சன்ரைசர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் கூறியுள்ளார்.

DIN

விராட் கோலியின் விக்கெட்டை எடுக்க விருப்பப்படுவதாக சன்ரைசர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2022 போட்டிக்காக உம்ரான் மாலிக்கை ரூ. 4 கோடிக்குத் தக்கவைத்துக் கொண்டது சன்ரைசர்ஸ் அணி. இந்த வருடம் இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 9 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஒவ்வொரு ஆட்டத்திலும் அதிவேகமாகப் பந்துவீசி கவனம் ஈர்த்து வருகிறார். 

ஒரு பேட்டியில் உம்ரான் மாலிக் கூறியதாவது:

லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் கே.எல். ராகுலின் விக்கெட்டை எடுக்க நினைத்தேன். ஆர்சிபிக்கு எதிராக அடுத்து விளையாடுகிறோம். இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் விக்கெட்டை எடுக்க ஆசைப்படுகிறேன். இருவருக்கும் நான் மிகப்பெரிய ரசிகன். என்னால் நூறு சதவீத உழைப்பைத்தான் செலுத்த முடியும். மற்றதெல்லாம் கடவுளின் கையில் என்று கூறியுள்ளார்.

ஆர்சிபி - சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பையில் நாளை (ஏப்ரல் 23) நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ.89.84 ஆக நிறைவு!

நடிகர் மோகன் லாலின் தாயார் காலமானார்

ரியான் கூக்லர் பகிர்ந்த பிளாக் பாந்தர் 2 படத்தின் அசலான கதை!

மகளிர் பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர்கள்!

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவு!

SCROLL FOR NEXT