ஐபிஎல்

அணியில் தோனி இருக்கும்போது எனக்கென்ன கவலை?: சிஎஸ்கே கேப்டனான பிறகு ஜடேஜா பேட்டி

ஏதாவது சந்தேகம் இருந்தால் நிச்சயமாக அவரிடம் தான் ஆலோசனைகள் கேட்பேன்.

DIN


சிஎஸ்கே அணியில் தோனி இருப்பதால் தனக்குக் கவலையில்லை என சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ஜடேஜா கூறியுள்ளார்.

ஐபிஎல் 2022 போட்டியில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் கேப்டனாக அல்லாமல் வீரராக மட்டுமே விளையாட தோனி முடிவெடுத்துள்ளார். இதையடுத்து புதிய கேப்டனுடன் ஐபிஎல் போட்டியில் களமிறங்குகிறது சிஎஸ்கே அணி. 2012 முதல் சிஎஸ்கே அணியில் விளையாடும் ஜடேஜா, அந்த அணியின் 3-வது கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். தோனி தலைமையில் சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை 4 முறையும் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை 2 முறையும் வென்றுள்ளது. 

ஐபிஎல் போட்டி மார்ச் 26-ல் தொடங்கி மே 29 அன்று நிறைவுபெறவுள்ளது. முதல் ஆட்டத்தில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதவுள்ளன.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டனான பிறகு ஜடேஜா பேட்டியளித்ததாவது:

சிஎஸ்கே அணியின் கேப்டன் ஆனதற்கு மகிழ்ச்சியடைகிறேன். அதேசமயம் தோனியினால் அணிக்குக் கிடைத்த பெருமைகளைச் சரியான முறையில் அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற பொறுப்பும் ஏற்பட்டுள்ளது. நான் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. தோனி அணியில் தான் உள்ளார். ஏதாவது சந்தேகம் இருந்தால் நிச்சயமாக அவரிடம் தான் ஆலோசனைகள் கேட்பேன். அவர் உடன் இருப்பதால் எனக்குக் கவலை எதுவுமில்லை. அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளியுங்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி தத்தெடுப்பு ஆவணங்களைப் பயன்படுத்தி குழந்தைகள் விற்பனை மருத்துவா் உள்பட 10 போ் கைது

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி ராஜிநாமா!

கேஜரிவால் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!

நவோனியா திருட்டுக் கும்பலின் உத்தி என்ன? செல்போன் திருட்டில் கைதேர்ந்தவர்கள்!!

தமிழக டிஜிபி நியமனம் விவகாரத்தை விரைந்து பரிசீலிக்க யுபிஎஸ்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT