ஆட்டமிழந்த கேன் வில்லியம்சன் 
ஐபிஎல்

மூன்றாம் நடுவரின் தீர்ப்பு: சன்ரைசர்ஸ் அணி ஆச்சர்யம்

கேப்டன் கேன் வில்லியம்சன் கேட்ச் தொடர்பான மூன்றாம் நடுவரின் தீர்ப்புக்கு சன்ரைசர்ஸ் அணி பயிற்சியாளர் டாம் மூடி தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

DIN

கேப்டன் கேன் வில்லியம்சன் கேட்ச் தொடர்பான மூன்றாம் நடுவரின் தீர்ப்புக்கு சன்ரைசர்ஸ் அணி பயிற்சியாளர் டாம் மூடி தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

புணேவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. அந்த அணியின் முக்கிய பேட்டர்கள் அனைவரும் சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடினார்கள். சஞ்சு சாம்சன் 55, படிக்கல் 41, பட்லர் 35, ஹெட்மையர் 32 ரன்கள் எடுத்தார்கள். நடராஜன், உம்ரான் மாலிக் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். வாஷிங்டன் சுந்தர் 3 ஓவர்கள் வீசி 47 ரன்கள் கொடுத்தார். அவருடைய பந்துவீச்சில் 5 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன.

சன்ரைசர்ஸ் அணி மிக மோசமாக பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மார்க்ரம் ஆட்டமிழக்காமல் 57 ரன்களும் 8-வது பேட்டராகக் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 14 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 40 ரன்களும் எடுத்தார்கள். சஹார் 3 விக்கெட்டுகளும் பிரசித் கிருஷ்ணா, போல்ட் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 61 ரன்கள் வித்தியாசத்தில் ஐபிஎல் 2022 போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது ராஜஸ்தான் அணி. 

இந்த ஆட்டத்தில் ஒரு சர்ச்சை ஏற்பட்டது. 2-வது ஓவரில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார் கேன் வில்லியம்சன். ஆனால் சஞ்சு சாம்சன் அந்த கேட்சைத் தவறவிட, அவர் அருகில் ஸ்லிப்பில் இருந்த படிக்கல் சட்டென்று கீழே விழ இருந்த பந்தைப் பிடித்தார்.  தொலைக்காட்சியில் கேட்சைப் பார்த்தபோது பந்து தரையில் பட்டு அதன்பிறகு படிக்கல் கேட்ச் பிடித்தது போலிருந்தது. ஆனால் மூன்றாம் நடுவர் ஆனந்தபத்மநாபன் அதை அவுட் என அறிவித்தார். 

இதுபற்றி சன்ரைசர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டாம் மூடி கூறியதாவது:

தொலைக்காட்சியில் என்ன நடந்தது எனப் பார்த்த பிறகு அது அவுட் என தீர்ப்பு வழங்கப்பட்டதை எண்ணி ஆச்சர்யமடைந்தோம். களத்தில் இருந்த நடுவர்கள் அதை மூன்றாம் நடுவருக்கு அனுப்பியதைப் புரிந்துகொள்கிறோம். அதன்பிறகு ஆதாரத்தைப் பார்த்தோம். நாங்கள் நடுவர்கள் கிடையாது. ஆனால் சரியான முடிவு என்ன என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

SCROLL FOR NEXT