ஐபிஎல்

அதிக தூரத்துக்கு சிக்ஸர் அடித்த வீரர்கள்: முதலிடம் யாருக்கு?

ஐபிஎல் 2022 போட்டியில் அதிக தூரத்துக்கு சிக்ஸர் அடித்த வீரர்களில் பஞ்சாப் அணியின் லியம் லிவிங்ஸ்டன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

DIN

ஐபிஎல் 2022 போட்டியில் அதிக தூரத்துக்கு சிக்ஸர் அடித்த வீரர்களில் பஞ்சாப் அணியின் லியம் லிவிங்ஸ்டன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் லிவிங்ஸ்டன், 10 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் எடுத்து தனது அணி சுலபமாக வெற்றி பெற வழிவகுத்தார். இந்த ஆட்டத்தில் அவர் அடித்த சிக்ஸர் ஒன்று அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. 

16-வது ஓவரை ஷமி வீசியபோது முதல் பந்தில் இமாலய சிக்ஸரை அடித்தார் லிவிங்ஸ்டன். அது 117 மீட்டர் தூரத்துக்குச் சென்றது. இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிக தூரத்துக்கு சென்ற சிக்ஸர் இதுதான். இதற்கு முன்பு பிரெவிஸ் 112 மீ. தூரத்துக்கு சிக்ஸர் அடித்ததே முதலிடத்தில் இருந்தது. 

அதிக தூரத்துக்கு சிக்ஸர் அடித்த வீரர்களில் முதல் ஐந்து இடங்களில் மூன்று இடங்கள் லிவிங்ஸ்டனுக்குக் கிடைத்துள்ளன. 

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லிவிங்ஸ்டனை ரூ. 11.5 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் தேர்வு செய்தது. இதுவரை 23 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 

ஐபிஎல் 2022: அதிக தூரத்துக்கு சிக்ஸர் அடித்த வீரர்கள்

1. லிவிங்ஸ்டன் - 117 மீ.
2. பிரெவிஸ் - 112 மீ.
3. லிவிங்ஸ்டன் - 108 மீ.
4. பட்லர் - 107 மீ. 
5. லிவிங்ஸ்டன் - 106 மீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பேருந்து நடத்துநருக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

நெல்லை, தென்காசியில் நவ. 7 முதல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கைலாசபுரம் பள்ளியில் குடிநீா்த் தட்டுப்பாடு: மேயரிடம் புகாா்

ராமையன்பட்டி அருகே திருட்டு: இளைஞா் கைது

கங்கைகொண்டான் அருகே போலீஸாருக்கு மிரட்டல்: இருவா் கைது

SCROLL FOR NEXT