ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ரன்கள்: தில்லிக்கு 273 ரன்கள் இலக்கு!
முதலில் பேட்டி செய்த கேகேஆர் அணி 20 ஓவர் முடிவில் 272/7 ரன்கள் குவித்தது.
முதலில் பேட்டி செய்த கேகேஆர் அணி 20 ஓவர் முடிவில் 272/7 ரன்கள் குவித்தது.
தில்லிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கினை தேர்வு செய்தது. தொடக்க வீரர் பிலிப் சால்ட் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க நரைன் அதிரடியாக விளையாடினார்.
21 பந்துகளில் அதிரடியாக அரைசதம் அடித்து அசத்தினார் சுனில் நரைன். இவருடன் இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷியும் (18) அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். இவர்களது விக்கெட்டுக்கு பிறகு ஆண்ட்ரே ரஸல் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Advertisement
Advertisement
8 பந்துகளில் ரிங்கு சிங் 26 ரன்கள் அடித்தார்.
20 ஓவர் முடிவில் கேகேஆர் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது.
கேகேஆர் அணியின் சுருக்கமான ஸ்கோர் கார்டு:
பிலிப் சால்ட் - 18
சுனில் நரைன் - 85
அங்கிரிஷ் ரகுவன்ஷி - 54
ஷ்ரேயாஸ் ஐயர் - 18
ஆண்ட்ரே ரஸல் - 41
ரிங்கு சிங் - 26
வெங்கடேஷ் ஐயர் - 5 *
ரமன்தீப் சிங் - 2
மிட்செல் ஸ்டார்க்-1*
ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ரன்கள்:
ஹைதராபாத் - 277/ 3
கேகேஆர் - 272/7
ஆர்சிபி -263/5
லக்னௌ- 257/5
ஆர்சிபி - 248/3
சிஎஸ்கே - 246/5
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.