ருதுராஜ் கெய்க்வாட்  படம் | ஐபிஎல்
ஐபிஎல்

ருதுராஜின் தலைமைப் பண்பு குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தது ஒரு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும்.

DIN

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தது ஒரு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. இப்போட்டியில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்த நிலையில், கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தது ஒரு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இயான் மோர்கன் (கோப்புப்படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 67 ரன்கள் எடுத்தது ருதுராஜ் கெய்க்வாட்டின் நம்பிக்கையை அதிகரிக்கும். ஐபிஎல் தொடரின் தொடக்கத்திலேயே இது போன்ற இன்னிங்ஸ்களில் விளையாடுவது இனிவரும் போட்டிகளில் அவரது முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும். பந்துவீச்சாளர்களை ருதுராஜ் அருமையாக பயன்படுத்தினார் என்றார்.

நேற்றையப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 67 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் அடித்த முதல் அரைசதம் இதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடியேற்றத்துடன் தொடங்கியது வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு!

கூட்டாட்சியை வலுப்படுத்துவோம்: மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

பாம் திரைப்பட டிரைலர்!

18 மைல்ஸ் படத்தின் முன்னோட்டம்!

SCROLL FOR NEXT