ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அதர்வா டைடு மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். அதர்வா டைடு மற்றும் பேர்ஸ்டோ தலா 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய பிரபசிம்ரன் சிங் (10 ரன்கள்), கேப்டன் சாம் கரண் (6 ரன்கள்) மற்றும் ஷஷாங் சிங் (9 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பஞ்சாப் கிங்ஸ் 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து, ஜித்தேஷ் சர்மா மற்றும் லியம் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சற்று அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருப்பினும், ஜித்தேஷ் சர்மா 29 ரன்களிலும், லிவிங்ஸ்டன் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய அஸுட்டோஷ் சர்மா 16 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் கேசவ் மகாராஜ் மற்றும் ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். டிரண்ட் போல்ட், குல்தீப் சென் மற்றும் யுஸ்வேந்திர சஹால் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்க நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடி வருகிறது.