டிராவிஸ் ஹெட் படம் | ஐபிஎல்
ஐபிஎல்

சன் ரைசர்ஸ் மீண்டும் புதிய சாதனை: ஆர்சிபிக்கு இமாலய இலக்கு!

பெங்களூருவுக்கு எதிராக முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

பெங்களூருவுக்கு எதிராக முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சன் ரைசர்ஸ் முதலில் பேட் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இந்த இணை தொடக்கம் முதலே அதிரடியில் மிரட்டியது. இருப்பினும், அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் டிராவிஸ் ஹெட் மற்றும் க்ளாசன் ஜோடி சேர்ந்தனர். டிராவிஸ் ஹெட் சிக்ஸர் மழையை பொழிந்தார். அதிரடியாக விளையாடிய அவர் 41 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும்.

க்ளாசன் தனது பங்குக்கு அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 31 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் களமிறங்கிய அய்டன் மார்கரம் மற்றும் அப்துல் சமத் ஆகியோரும் அதிரடியை நிறுத்தவில்லை. அய்டன் மார்கரம் 17 பந்துகளில் 32 ரன்களும் (2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), அப்துல் சமத் 10 பந்துகளில் 37 ரன்களும் (4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்தனர்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அவர்களது சொந்த சாதனையை முறியடித்து மீண்டும் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளனர்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற புதிய சாதனையை சன் ரைசர்ஸ் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சன் ரைசர்ஸ் எடுத்த 277 ரன்களே ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அந்த சாதனையை இன்று அவர்களே முறியத்துள்ளனர்.

288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பெங்களூரு அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிவேகம், குறைந்த வயதில் 880 கோல்கள்..! மெஸ்ஸி புதிய சாதனை!

ஆஸி.க்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

திமுக முப்பெரும் விழா தொடங்கியது! கனிமொழிக்கு பெரியார் விருதை வழங்கினார் ஸ்டாலின்!

சவுதி அரேபியா சென்ற பாக். பிரதமர்! ஒரே வாரத்தில் 3வது முறையாக மத்திய கிழக்கு பயணம்!

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

SCROLL FOR NEXT