படங்கள்: மும்பை இந்தியன்ஸ்/ எக்ஸ்.
ஐபிஎல்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

பிரபல வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவை இயன் பிஷப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

DIN

ஐபிஎல் போட்டியின் 33-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வியாழக்கிழமை வென்றது.

20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. 19.1 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் எடுத்து, 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகள் 21 ரன்கள் மட்டுமே கொடுத்த மும்பை அணியின் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

பும்ராவை பாராட்டி முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணி வீரரும் வர்ணனையாளருமான இயன் பிஷப் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒரு வேளை ஜஸ்ப்ரீத் பும்ரா வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுத்தால் நான் அவருக்கு அபிஷேகம் செய்வேன். அவர் பயங்கரமான திறமைசாலி, தெளிவாய்ப் பேசக்கூடியவர். இளம் வேகப் பந்து வீச்சாளர்களுக்கு அவரை வைத்து உலகம் முழுவதும் எல்லா வயதினருக்கும் வகுப்பெடுப்பேன். அவர் ஓய்வு பெறும்வரை என்னால் காத்திருக்க முடியாது. #ஆசிரியர் ” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புளிய மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, ஓட்டுநர் படுகாயம்

நீட் முதுநிலை தேர்வு எழுதியவர்களுக்கு எச்சரிக்கை!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கல்லணைக் கால்வாய் நீரில் மூழ்கி பலி

சிர்கா பெயிண்ட்ஸ் லாபம் 39 சதவிகிதம் உயர்வு!

டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஜேசன் ஹோல்டர்!

SCROLL FOR NEXT