படம் | AP
ஐபிஎல்

முதல் முறை போன்று தெரியவில்லை; ஷுப்மன் கில்லுக்கு சாய் கிஷோர் புகழாரம்!

ஷுப்மன் கில் முதல் முறையாக அணியை வழிநடத்துவது போன்று தெரியவில்லை என சாய் கிஷார் தெரிவித்துள்ளார்.

DIN

ஷுப்மன் கில் முதல் முறையாக அணியை வழிநடத்துவது போன்று தெரியவில்லை என சாய் கிஷார் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம், ஷுப்மன் கில் கேப்டன் பொறுப்பை வெற்றியுடன் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில், ஷுப்மன் கில் முதல் முறையாக அணியை வழிநடத்துவது போன்று தெரியவில்லை என சாய் கிஷார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷுப்மன் கில் அணியை சிறப்பாக வழிநடத்தினார். அவர் முதல் முறை கேப்டனாக செயல்படுவது போன்று தெரியவில்லை. போட்டியின்போது அவர் கொடுத்த அறிவுரைகள் மிகவும் சிறப்பானதாகவும், உதவிகரமானதாகவும் இருந்தது என்றார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (மார்ச் 26) நடைபெறும் போட்டியில் குஜாரத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பால் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

SCROLL FOR NEXT