ஆவேஷ் கான் படம் | AP
ஐபிஎல்

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் தனது பந்துவீச்சு குறித்து மனம் திறந்துள்ளார்.

DIN

தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக வீசிய கடைசி ஓவரே தனது சிறந்த ஓவர் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி கேப்பிடல்ஸை வீழ்த்தியது.

நேற்றையப் போட்டியில் கடைசி ஓவரில் தில்லி கேப்பிடல்ஸின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட அந்த ஓவரை அபாரமாக வீசிய ஆவேஷ் கான் வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன்மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் தனது 2-வது வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த நிலையில், தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக வீசிய கடைசி ஓவரே தனது சிறந்த ஓவர் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ஆட்டத்தின் இறுதி ஓவரை நான் வீசுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ராஜஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தின்போது இறுதி ஓவரை வீசினேன். தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடியபோதும் கடைசி ஓவரை வீசியுள்ளேன். பந்துவீச்சை சிறப்பாக செயல்படுத்துவதன் அடிப்படையில், இன்றையப் போட்டியில் நான் வீசிய இறுதி ஓவரே எனது சிறந்த ஓவர். அனைத்து பந்துகளையும் அகலமான யார்க்கராக ஒரே இடத்தில் வீசினேன் என்றார்.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பு, ஆவேஷ் கான் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உஷ்... மீண்டும் வருக... அஞ்சு குரியன்!

வெளிநாட்டில் தங்கம் வாங்க திட்டமா? எச்சரிக்கை! | Cyber Alert | Cyber Security

என் இதயமே... நைலா உஷா!

அழகு பொம்மை... ரகுல் ப்ரீத் சிங்!

கேனுக்குள் மாட்டிக்கொண்ட நாயின் தலை! பாதுகாப்பாக மீட்ட தீயணைப்புத் துறையினர்! | Vellore

SCROLL FOR NEXT