படங்கள்: சிஎஸ்கே, ஆவேஷம்/ எக்ஸ்
ஐபிஎல்

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

ஆவேஷம் படத்தின் பாணியில் சிஎஸ்கே வீரர்கள் பகிர்ந்த ரீல்ஸ் வைரலாகி வருகிறது.

DIN

சிஎஸ்கே அணிக்காக இலங்கையை சேர்ந்த மதீஷா பதிரானாவும் வங்கதேச அணியின் வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானும் விளையாடுகிறார்கள்.

சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கும் வங்கதேச அணிக்கும் மோதல் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. சமூக வலைதளங்களிலும் இரு நாட்டு ரசிகர்கள் அடித்துகொள்வது வழக்கமாகிவிட்டன.

சமீபத்தில் நடந்த இருதரப்பு கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் ஒருவரையிருவர் கிண்டல் செய்து தங்களது வெற்றிகளை வெளிப்படுத்தி சர்வதேச அளவில் கவனம் பெற்றனர்.

ஆவேஷம் படத்தில் ஃபகத் ஃபாசில் ஒரு ரீல்ஸ் செய்திருப்பார். அதில் சிரிப்பு ஒரு பக்கம், கோபம் மறு பக்கம் என இருக்கும்படி செய்திருப்பார். படத்துக்கு மட்டுமில்லாமல் இந்த ரீல்ஸுக்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகின்றன.

இந்நிலையில் சிஎஸ்கே அணியில் விளையாடும் பதிரானா, முஸ்தஃபிசூர் இந்த ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்திருக்கிறார்கள். இந்த ரீல்ஸுக்கு மிகவும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இரு நாட்டு பிரச்னையை இப்படி அசால்ட்டாக தீர்த்துவிட்டார்களே என ரசிகர்கள் கமெண்ட்டுகளில் கூறி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT