ரவீந்திர ஜடேஜா  படம் | ஐபிஎல்
ஐபிஎல்

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

DIN

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் தர்மசாலாவில் நடைபெற்ற நேற்றையை ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். சிறப்பாக செயல்பட்ட அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிகமுறை ஆட்டநாயகன் விருதினை வென்ற வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

முன்னதாக, சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி 15 முறை ஆட்டநாயகன் விருது வென்றிருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தோனியின் இந்த சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடித்துள்ளார்.

எம்.எஸ்.தோனி

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கேவுக்காக அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர்கள்

ரவீந்திர ஜடேஜா - 16 முறை

எம்.எஸ்.தோனி - 15 முறை

சுரேஷ் ரெய்னா - 12 முறை

ருதுராஜ் கெய்க்வாட் - 11 முறை

மைக்கேல் ஹஸ்ஸி - 10 முறை

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா 43 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக டிஜிபி பதவிக் காலத்தை நீட்டிக்க தடை கோரி: உயா்நீதிமன்றத்தில் மனு

பூ வியாபாரியிடம் பணப் பையை திருடிய பெண் கைது

சிகிச்சையில் விவசாயி உயிரிழப்பு: போலி மருத்துவா் கைது

கடலாடி போக்குவரத்துக் கழகப் பணிமனை கட்டும் பணிக்கு இடைக்காலத் தடை

இரு தரப்பு மோதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT