ரிஷப் பந்த் படம் | ஐபிஎல்
ஐபிஎல்

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் விளையாட தடை; தில்லிக்கு பின்னடைவா?

ஆர்சிபிக்கு எதிரான முக்கியமான போட்டியில் தில்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

DIN

ஆர்சிபிக்கு எதிரான முக்கியமான போட்டியில் தில்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்காக அணிகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள் கடுமையாக போட்டியிட்டுக் கொள்கின்றன.

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக மெதுவாக ஓவர் வீசியதால் தில்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு நாளை பெங்களூருவுக்கு எதிராக நடைபெறும் முக்கியமான போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் விதிமுறையை மீறியதால், ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. ராஜஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் இறுதி ஓவரை குறிப்பிட்ட நேரத்துக்குள் வீசவில்லை. தில்லி அணி ஓவர் வீசுவதற்கு 10 நிமிடங்கள் கூடுதலாக எடுத்துக் கொண்டது.

இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: தில்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், அவர் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற நாளை நடைபெறவிருக்கும் பெங்களூருவுக்கு எதிரான போட்டி தில்லி கேப்பிடல்ஸுக்கு முக்கியமானதாக உள்ள நிலையில், ரிஷப் பந்த்துக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடை அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

முதல் டி20: இருவர் அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT