ரிஷப் பந்த்  PTI
ஐபிஎல்

ரிஷப் பந்த் உள்ளுணர்வு சார்ந்த கேப்டன்: கங்குலி புகழாரம்!

தில்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் கங்குலி ரிஷப் பந்தினை புகழ்ந்து பேசியுள்ளார்.

DIN

தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 43 பந்துகளில் 88 ரன்கள் அடித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் கேப்டன் 2ஆவது முறையாக ஆட்ட நாயகன் விருது பெருவது இதுவே முதல் முறையாகும். லக்னௌவுக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாகவே விளையாடினார்.

கார் விபத்திலிருந்து குணமடைந்து வந்த ரிஷப் பந்த் தனது அருமையான ஃபார்மினை மீண்டும் கொண்டு வந்துள்ளார். 13 போட்டிகளில் 446 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 40.54. ஸ்டிரைக் ரெட் 155.40 ஆகும்.

26 வயதான ரிஷப் பந்த் ஐபிஎல் தொடரில் தில்லி அணிக்கு கேப்டானாக செயல்பட்டு வருகிறார். ஜியோ சினிமாஸில் பேசிய கங்குலி கூறியதாவது:

ரிஷப் பந்த் இளைமையான கேப்டன்; காலப்போக்கில் அதிகமாக கற்றுக்கொள்வார். தொடருக்கு முன்பு முழுவதுமாக ரிஷப் பந்த விளையாடுவாரா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. ஆனால், ரிஷப் காயத்திலிருந்து மீண்டுவந்து தொடர் முழுவதும் விளையாடினார்.

ஐபிஎல் 10 அணிகளாக மாறியபிறகு இந்திய வீரர்கள் மிகவும் முக்கியம். ரிஷப் பந்த் தொடர் முழுவதும் விளையாடியதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சில நேரங்களில் கேப்டன்சியில் தவறிழைத்தாலும் பல நேரங்களில் சூழ்ச்சித்திறமுடைய தன்னுடைய தலைமைப் பண்பினை வெளிப்படுத்தியுள்ளார் பந்த். காலம் வரும்போது சிறந்த கேப்டனாக மாறுவார்.

முதல்நாளில் இருந்து யாரும் சிறந்த கேப்டனாக உருவாக முடியாது. ஆனால் பந்த் இயல்பான உள்ளுணர்வு சார்ந்த கேப்டன். அந்த நேரத்தில் ஆடுகளத்தில் திட்டமிடுபவர். இன்னும் அனுபவத்தினால் சிறந்த கேப்டனாக மாறுவார் என்றார்.

தில்லி அணி இந்த ஐபிஎல் தொடரில் 7 வெற்றி 7 தோல்விகளை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குளிா்பானம் ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்தது: ஓட்டுநா் காயம்

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...? கல்கி பிரியன், மூத்த பத்திரிகையாளர்

காலை உணவுத் திட்டம்!

முயற்சியே வலிமை!

தன்னாட்சித் தத்துவம்தான் வெளியுறவுக் கொள்கை!

SCROLL FOR NEXT