எம்.எஸ்.தோனி  படம் | ஐபிஎல்
ஐபிஎல்

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

எம்.எஸ்.தோனி அவரது கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடியதாக நினைக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

DIN

எம்.எஸ்.தோனி அவரது கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடியதாக நினைக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான வாழ்வா? சாவா? போட்டி நேற்று (மே 18) பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

இந்த நிலையில், எம்.எஸ்.தோனி அவரது கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடியதாக நினைக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கேவின் முன்னாள் வீரருமான அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

அம்பத்தி ராயுடு

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இதனை எம்.எஸ்.தோனியின் கடைசி ஐபிஎல் போட்டி என நினைக்கவில்லை. அவரது கிரிக்கெட் பயணத்தை இப்படி முடிப்பதைப் பார்க்க நான் விரும்பவில்லை. அவர் ஆட்டமிழந்தபோது, ஏமாற்றத்துடன் காணப்பட்டார். பிளே ஆஃப் போட்டிக்குத் தகுதி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என அவர் நினைத்தார். இம்பாக்ட் பிளேயர் விதியை பிசிசிஐ நீக்கக் கூடாது. நாங்கள் எம்.எஸ்.தோனி விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறோம். ஆனால், அந்த முடிவு பிசிசிஐ-ன் கைகளில்தான் உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

SCROLL FOR NEXT